Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களே…. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

நாட்டின் 75வது சுதந்திர தினம் மற்றும் பாரதியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு கட்டுரை போட்டியை தமிழக ஆளுநர் என்.ஆர் ரவி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பள்ளி மாணவர்கள் “இந்திய விடுதலைப்போரில் மகாகவி பாரதியாரின் பங்கு” என்ற தலைப்பில் 2000 முதல் 2500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். கல்லூரி மாணவர்கள்”பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்” என்ற தலைப்பில், 3,500 முதல் 4,000 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.

போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ஜனவரி 26 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடக்கும் குடியரசு தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும். பள்ளி அளவில் முதலிடம் பெறுபவருக்கு ஒரு லட்சமும், கல்லூரி அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு இரண்டு லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் எழுதும் மாணவர்கள், mahakavibharatisch [email protected] என்ற மின்னஞ்சலுக்கும், ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள், mahakavibharatisch [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் ஜனவரி 8 மாலை 5 மணிக்குள் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். அதனுடன், மாணவர்கள் தங்கள் பெயர், வீட்டின் முகவரி, கல்வி நிறுவனம், மொபைல் போன் எண் ஆகிய விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |