ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 போலீசார் படுகாயமடைந்தனர். ஸ்ரீநகரின் பாந்தாசவுத் பகுதியில் போலீஸ் ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 14 போலீசார் காயம் அடைந்த நிலையில் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.