பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மும்பையில் உள்ள வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது தோழியான அம்ரிதா அரோரா ஆகியோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களாக நிறைய பார்ட்டியில் கலந்து கொண்டனர். மேலும் சரியான கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கரீனா கபூர் மற்றும் அவரது தோழியுடன் தொடர்பில் இருந்தவர்களை சோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா விதிகளை மீறிய புகாரில் பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மும்பை வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.