திமுக அரசை கண்டித்து பாஜகவினர் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நுதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரண்மனை முன்பு பாஜகவினர் சார்பில் வாயில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் பாஜக நிர்வாகிகள் மீது பொய் புகார் போடும் காவல்துறையினரை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பாஜக நகர தலைவர் வீரபாகு, மாநில செய்தி தொடர்பாளர் நாகராஜன், மாநில செயலாளர்கள் சண்முகராஜா, முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் குமார், இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.