ஒமைக்ரேன் தடுப்பூசியின் செயல் திறனை குறைக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உருவான உருமாறிய ஒமைக்ரேன் தொற்று உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரேன் தொற்று தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கும் என்பதால் அதன் பரவல் விகிதம் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஒமைக்ரேன் எந்த அளவு தொற்றில் வீரியமானது, தீவிர உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும், சிகிச்சைக்கு எவ்வாறு கட்டுப்படும் என்பதை அறிய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஒமைக்ரேன் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதே இப்போது நமக்கு ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது.