மளிகை-டீக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீலாங்கள்ளிவலசு பகுதியில் மளிகை கடையில் பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக பெட்ரோலிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மூலனுர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெருந்தேவி என்பவரது மளிகை கடையிலும், பாக்கியம் என்பவரது டீக்கடையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 10 லிட்டர் பெட்ரோலையும் பறிமுதல் செய்தனர்.