ஒமிக்ரான் தொற்று அதிகரித்துவரும் நிலையில் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா என்பது குறித்து டெல்லி முதலமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இது டெல்டா வகை கொரோனா தொற்றை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் இஸ்ரேல், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பரவிய நிலையில் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. முதன் முதலில் கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கால் பதித்து விட்டது.
எனினும் ஒமிக்ரான் வைரஸ் பரவினால் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. இந்த பாதிப்பு அதிகரித்தால் மக்களின் பாதுகாப்பு கருதி, மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து கடும் கட்டுப்பாடுகளை விதிப்போம். தற்போது அதற்கான சூழல் இல்லை. அதன்பின் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தாமாக முன்வந்து விரைவில் போட்டுக்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.