Categories
தேனி மாவட்ட செய்திகள்

கருத்து சுதந்திரத்தை பறிக்கும்…. திமுக அரசை கண்டித்து…. பாஜகவினர் நுதன போராட்டம்….!!

கருத்து சுதந்திரத்தை பறிக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் நுதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் பாஜகவினர் மீது பொய் புகார் போடும் காவல்துறையை கண்டித்தும், குண்டர் தடுப்புச் சட்டத்தை தவறான வழியில் பயன்படுத்தும் திமுக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதற்கு பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கட்சி மாவட்ட தலைவர் பாண்டியன், மாநில மருத்துவர் அணி தலைவர் விஜயபாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் என போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |