மஹத் முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் மஹத் மங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். தற்போது இவர் நடித்துள்ள ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டு இவருக்கும் மிஸ்ரா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். இந்நிலையில், மஹத் முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Hello everyone that’s me little Adhu! 👶🏻
& I’m six months old 🤩#AdhiyamanRaghavendra pic.twitter.com/KfWN29KDMp— Mahat Raghavendra (@MahatOfficial) December 13, 2021