கடலில் சரக்கு கப்பல்கள் ஒன்றையொன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வீடனிற்கு அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பால்டிக் கடல் வழியாக சென்ற நெதர்லாந்து கப்பலும் அதே நேரத்தில் எதிரே வந்த இங்கிலாந்து கப்பலும் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளன. இதனால் நெதர்லாந்து கப்பல் கடலில் கவிழ்ந்தது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் படகுகளில் விரைவாக வந்து கடலில் விழுந்த கப்பலில் பயணித்த இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் மீட்பு பணிக்காக நெதர்லாந்தில் இருந்து ஒரு படகு மற்றும் ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.