Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று சிறந்த முன்னேற்றங்கள் உண்டாகும்.

பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரக்கூடும் இன்று கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். கஷ்டம் படிப்படியாக குறையும். மனசுக்குள் குழப்பம் விலகிச்செல்லும். பணிச்சுமை அதிகரிக்கும். பொறுப்புகள் கூடும். அதிக உழைப்பின் காரணமாக வேலையில் ஈடுபடுவீர்கள். உடல் சோர்வாக காணப்படும். சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.

ஆடம்பரப் பொருட்களை வாங்ககூடிய யோகம் இருக்கும். நல்ல வரன்கள் வரக்கூடும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். இன்றைய நாளை நீங்கள் அற்புதமாக பயன்படுத்துவீர்கள். நல்ல எண்ணங்கள் உருவாகும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். தாயிடம் கோபம் காட்டக்கூடாது. காதலில் உள்ளவர்கள் பக்குவமாக நடந்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்கும். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் சாதிக்க முடியும். விளையாட்டுத் துறையில் மாணவர்கள் சாதனை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |