Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வழக்குகளில் வெற்றி பெற்று மகிழ்வீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த நாளாக இன்றைய நாள் இருக்கும். புதிய பதவிகள் தேடி வரக்கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருப்பதால், பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும்.

பெண்களுக்கும் பணவரவு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். இன்று புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |