பொருட்களின் இறக்குமதிக்கு தடைவிதித்த அமெரிக்காவிற்கு செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் உள்ள சின்ஜியாங் மாநிலத்தில் லட்சக்கணக்கான உய்கர் இன இஸ்லாமிய மக்களை கட்டாயமாக பணிபுரிய வைத்து தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதில் “இந்த தடை உத்தரவை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்.
மேலும் சீனாவின் உள் விவரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.