Categories
மாநில செய்திகள்

தமிழத்தில் மீண்டும் முழு ஊரடங்கு…? அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!!

தமிழகத்தில் கொரோனா கடுமையாக பரவி வந்த சூழ்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்று கேள்வி எழும்பி வருகிறது. இதற்கு பதிலளித்த அமைச்சர் சுப்பிரமணியம், தமிழகத்தின் முழு ஊரடங்கு கூடாது என்பது அனைவரது விருப்பம். கடந்த இரண்டு ஆண்டுகளை ஊரடங்கில் கடந்து விட்டோம். இனி ஊரடங்கு வராமல் இருப்பதற்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது முக கவசம் அணிவது கட்டாயம் என்பதே வழி என்று கூறியுள்ளார்.

Categories

Tech |