தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பெண்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்பு பெண்களிடையே வரவேற்பு பெற்றது. அதேபோல அரசுப் பணியில் இருக்கும் மகளிருக்கும் பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடக்கும் விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை வழங்குகிறார்.