கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரணமாக மூடப்பட்டிருந்த எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன.
டெல்டா என்னும் உருமாற்றம் அடைந்த தொற்றின் காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து எல்லை மாகாணங்கள் 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. மேலும் அருகே உள்ள விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திற்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் வருகையினால் பல மாகாணங்களில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதிலும் தடுப்பூசி செலுத்தியவர்கள் அனைவரும் செல்லலாம் என்பதால் குயின்ஸ்லாந்து மாகாண எல்லைகள் திறந்து விடப்பட்டன.
இதனால் கூலன்கட்டா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுமார் 100 விமானங்களும் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமாக விமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.