Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் படிக்க போகிறேன்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள கோட்டூர்புரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிக்க போவதாக கூறி அறைக்குள் சென்ற ஹரிஹரன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது ஹரிஹரன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு முருகன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |