Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மகனும்,மருமகளும் கவனிக்கவில்லை” கணவரின் இறந்த நாளில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

மகனும், மருமகளும் சரியாக கவனிக்காததால் மூதாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பெசன்ட்நகர் கவர்னர் விருந்தினர் இல்லம் பின்புறம் இருக்கும் கடலில் இறங்கி மூதாட்டி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீஸ்காரரான ராஜா என்பவர் மூதாட்டியை காப்பாற்றியுள்ளார். அதன்பிறகு மூதாட்டியை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த மூதாட்டி புரசைவாக்கம் பகுதியில் வசிக்கும் மகேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மகனும், மருமகளும் சரியாக கவனிக்காததால் மகேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது கணவரின் இறந்த நாளன்று கடலில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மகேஸ்வரியின் மகனை காவல்நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரை கூறியுள்ளனர். அதன்பிறகு மூதாட்டியை அவரது மகனுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |