Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மினி லாரி-கார் மோதல்….. படுகாயமடைந்த 9 பேர்…. சென்னையில் கோர விபத்து…!!

மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் இருந்து தகர பெட்டிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் இ.சி.ஆர் சாலையில் தேவனேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மினி லாரியை முந்தி செல்ல முயற்சி செய்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் மோதியதால் மினி லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துவிட்டது. மேலும் கார் பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த 6 பேர், காரில் பயணம் செய்த 3 பேர் என மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாமல்லபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |