இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் “ஒமிக்ரான்” பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே போட்டுக்கொண்ட தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராக திறம்பட செயல்படாது. விரைவில் உலகம் முழுவதும் ஒமிக்ரான் பேரலை வீசும் என்று எச்சரித்துள்ளார். மேலும் அறிவியல் உலகம் ஒமிக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த மூன்றாவது டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. எனவே இங்கிலாந்தில் இன்னொரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஒரு மாத காலத்திற்குள் மக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட உள்ளது.
ஆனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். அதேசமயம் விஞ்ஞானிகள் தரப்பில் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த மூன்றாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டால் நல்லது என்று தான் கூறுகிறார்களே தவிர ஒமிக்ரான் தீவிரமானது அல்ல என்பதனை அவர்களால் உறுதிபடுத்தி சொல்ல முடியவில்லை. இந்த சூழ்நிலையிலும் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதால் ஒமிக்ரான் படுவேகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் உலகம் எச்சரிக்கிறது.