Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்…. தேங்கிய மழை நீரால் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளகுளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் அதே பகுதியில் வசிக்கும் 5 வயதுடைய தர்ஷன் என்ற சிறுவனை சைக்கிளில் ஏற்றி கொண்டு விளையாடியுள்ளான். இதனை அடுத்து சேந்தனூரிலிருந்து தென்குச்சிபாளையம் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் 2 சிறுவர்களும் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில் சிறுவர்களை தேடி அலைந்த பெற்றோர் சுரங்கப்பாதை பகுதியில் தேங்கிய தண்ணீரில் இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |