Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யாருடா இப்படி பண்ணீங்க?…. எலும்பு கூடாக மாறிய மோட்டார் சைக்கிள்…. பெரும் பரபரப்பு….!!!

மோட்டார் சைக்கிள் மீது தீ வைத்து எரித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாப்பேட்டை பகுதியில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக இருக்கிறார். இந்நிலையில் தனபால் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் தனபால் வந்து பார்க்கையில் மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டு எரிந்து நாசமானதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனபால் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது தீ வைத்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |