அரசு ஊழியர்கள் முறைகேடு செய்தால் அவர்கள் மீதான புகார்கள் ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்பாலின் ஊழலுக்கு எதிராக புகார்களை எளிய முறையில் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் சேவை தொடங்கப்பட்டது. இதற்காக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு லோக்பால் சட்டம் இயற்றப்பட்டது. பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்கள் அரசு உயர் பதவியில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு லோக்பால் அமைப்பையும், மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிப்பதற்கு லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தி சட்டம் இயற்றப்பட்டது.
இந்தநிலையில் லோக்பால் ஊழலுக்கு எதிராக புகார்களை தெரிவிக்க ஆன்லைன் சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் முறைகேடு செய்தால் அவர்கள் மீதான புகார்களை ஆதாரத்துடன் https://lokpalonline.gov.in என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லோக்பால் தலைவர் பினாகி சந்திரகோஷ் பேசியதாவது “அரசு ஊழியர்கள் ஊழல் முறைகேடு செய்தால் அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அவர்கள் மீதான புகார்களை பெறுவதற்கு ஆன்லைன் வசதி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.