Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. உடல் கருகி பலியான வாலிபர்கள்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி தீப்பிடித்த விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று ஈரோடு நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாம்பாற்று பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பேருந்தின் மீது மோதிவிட்டது. மேலும் மோட்டார் சைக்கிள் பேருந்தின் அடியில் சிக்கியதால் உராய்வின் காரணமாக பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த டிரைவர் கண்டக்டர் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் வேகமாக பேருந்தை விட்டு இறங்கினர்.

ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் காட்டுதலைவாசல் பகுதியில் வசித்த மணிகண்டன் மற்றும் செல்வம் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் காரைக்குடி நோக்கி சென்றபோது விபத்தில் சிக்கி இறந்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |