Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“மகள் போல் நினைத்து காப்பாற்றினேன்” குரங்குக்கு நடந்த விபரீதம்…. வருத்தத்தில் ஓட்டுநர்…!!

ஓட்டுநர் காப்பாற்றிய குரங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் ஒரு குரங்கு சுற்றி திரிந்தது. இந்த குரங்கை நாய்கள் துரத்தி கடித்துள்ளது. இதனால் காயமடைந்த குரங்கு மரத்தில் ஏறி நின்றபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் கார் ஓட்டுநரான பிரபு என்பவர் அந்த குரங்கை மீட்டு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்துள்ளார். இதனை அடுத்து பிரபு அந்த குரங்கின் நெஞ்சில் கை வைத்து அழுத்தியதோடு, மூச்சு காற்றை செலுத்தி முதலுதவி அளித்துள்ளார். இதனால் மயக்கம் தெளிந்த குரங்கை பெரம்பலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குரங்கு பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.

இதுகுறித்து பிரபு கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக்கொண்ட முதலுதவி பயிற்சி எனக்கு இப்போது பயன்பட்டது. எனக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். அந்த பெண் குரங்கை மகள் போல் எண்ணி காப்பாற்றினேன். மயக்கம் தெளிந்த நிலையில் அந்த பெண் குரங்கு எனது உடலை கட்டிப்பிடித்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி குரங்கு இறந்தது குறித்தும், அதனை அடக்கம் செய்தது குறித்தும் வனத்துறையினர் என்னிடம் தெரிவிக்காதது வருத்தமாக இருப்பதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |