மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் கூலி தொழிலாளியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து மாணவியின் தாயார் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.