Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு – நடுங்கிய வீரர்கள்….!!

ஆந்திரா – விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்திற்குள் நுழைந்த பாம்பினால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது.

இந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டுத் தொடரான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளான இன்று தொடங்கிய முதல் சுற்று ஆட்டத்தில் ஆந்திர பிரதேச அணி, விதர்பா அணியை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற விதர்பா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து விதர்பா அணி வீரர்கள் ஃபீல்டிங் செய்வதற்காக மைதானத்திற்குள் சென்றிருந்த போது, பாம்பு ஒன்று மைதானத்தை சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.

அதனைக்கண்ட வீரர்கள் சற்று அச்சத்துடன் மைதானத்தில் நின்று கொண்டிருந்தனர். பின் மைதான பராமரிப்பாளர்கள் பாம்பினை விரட்டினர். இதனால் இவ்விரு அணிகளுக்கிடையிலான ஆட்டம் சிறிது தாமதமாகத் தொடங்கியது. இந்த காணொலியை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.பிசிசிஐயின் இந்த காணொலியானது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |