Categories
மாநில செய்திகள்

BREAKING: குரூப் 4 முறைகேடு…. சிபிஐ விசாரிக்க உத்தரவு….!!!!

தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வழக்கு விசாரணை சரிவர நடைபெறாததால் சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

Categories

Tech |