Categories
உலக செய்திகள்

“அடடா அருமை!”…. கொரோனாவை ஒழிக்க புதிதாக 4 மருந்துகள்….. சுவிட்சர்லாந்தின் சூப்பர் திட்டம்….!!

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றை எதிர்த்து செயல்படக்கூடிய மருந்துகளைத் தயாரிப்பதற்கு நான்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கொரோனாவிற்கு எதிராக 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்த புது மருந்துகள் அடுத்த வருட கடைசியில் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தங்களுக்கான, செலவு சுமார் $ 29.2 மில்லியன் ஆகும். கொரோனா பாதிப்பால் உண்டாகும் அறிகுறிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காகவும், நோயின் தீவிரத்தை குறைப்பதற்காகவும் இந்த மருந்துகளை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இதில், 2 மருந்துகள் மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சைகளுக்குரியது. இவற்றில் ஒரு மருந்து, கொரோனா தொற்றால் அதிக காலத்திற்கு பாதிக்கப்பட்டவர்களின் நரம்பியல் மனநல அறிகுறிகளுக்குரியது. மற்றொரு மருந்து, கொரோனா தொற்றின் தீவிரத்தால், ஆபத்தில் இருக்கும் நோயாளிகளுக்குப் பயன்படுத்தக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது மருந்து, வாய்வழியாக பயன்படுத்தக்கூடிய நுரையீரல் வாசோடைலேட்டர். இந்த மருந்தை பயன்படுத்தி சுவாச செயலிழப்பைத் தடுக்கலாம். மேலும், செயற்கையான முறையில் பயன்படுத்தப்படும், காற்றோட்டத்திற்கான தேவையைக் குறைப்பதற்கு பயன்படும் என்று கூறியுள்ளனர்.

நான்காம் மருந்து, கொரோனா தொற்றின் அனைத்து பாதிப்புகளுக்கும்  சிகிச்சை மேற்கொள்ளும், எதிர்ப்பு மருந்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |