ஆட்சிகள் அமைவதற்குதான் நான் காரணமாக இருந்துள்ளேனே தவிர ஆட்சிகள் கவிழ்ப்பதற்கு ஒருபோதும் நான் காரணமாக இருந்ததில்லை. ஆனால் அவர்கள் ஆட்சியில் கவிழ்வதற்கு மட்டுமே நான் காரணம் என்பதுபோல குறை கூறுகிறார்கள். என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் சாமி. இவர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. இருந்த பொறுப்பிலிருந்து அன்மையில் நீக்கிவிட்டனர்.
ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் சுப்பிரமணியன் சாமி, அவ்வப்போது பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களையும் சீண்டிக்கொண்டே இருப்பார். ஆனாலும் பாஜக ஆதரவையும் கைவிடமாட்டார். இவர் தேசிய அரசியல் தொடர்பாக ஏதேனும் ட்வீட் போட்டு கொண்டே இருப்பார். திடீரென்று தமிழகத்தின் பக்கமும் திரும்பிப் பார்ப்பார். இந்தநிலையில், அவர் ஒரு புது ட்விட் ஒன்று போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் பி. வி. நரசிம்மசிங், ஜெயலலிதா, வாஜ்பாய் அரசு கவிழ நான் தான் காரணம். ஆனால் சந்திரசேகர் பி.வி நரசிம்மராவ் ஆட்சி அமைப்பதற்கும் 2014-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறவும் நான்தான் காரணம்.
ராமர் சேது பிரச்சனையை நான் கிளம்பியதால் தான் வாஜ்பாயால் மத்திய ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. அதேபோன்று 2ஜி வழக்கு உள்ளிட்டவற்றிலும் எனது பங்கு அதிகம் என்று கூறியுள்ளார் சுப்பிரமணியன் சாமி. உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட சுப்பிரமணியசாமி தான் காரணம். ஜெயலலிதாவின் முதலாவது அரசில் நடந்த பல்வேறு முறைகேடுகள் ஊழல்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் சாமிதான். மேலும் இவர் ஆளுநர் சென்னாரெட்டியிடம் அளித்த புகாரின் பெயரில்தான் பின்னர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக வழக்குகள் தொடர்ந்தது.
தனி நீதிமன்றத்தில் ஒவ்வொரு வழக்காக தண்டிக்கப்பட்டார் ஜெயலலிதா. இதன் உச்சமாக பெங்களூர் தனி நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஆணையிட்டது. உச்சநீதிமன்றமும் பின்னர் அதை உறுதி செய்தது. ஆனால் சிறை தண்டனைக்கு முன்பாகவே ஜெயலலிதா இறந்துவிட்டார். இந்தநிலையில், மத்தியில் கூட்டணி ஆட்சியின் தொடக்க காலத்தில் சாமியின் திருவிளையாடல்கள் நிறையவே இருந்தது. டெல்லியில் மாறி மாறி பிரதமர் பதவியேற்ற நிலையில் சுவாமியின் பங்கும் அதில் அதிகமாக இருந்தது. ஆதரவை திரட்டுவது பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றில் சாமி அதிகளவில் ஈடுபட்டார். அதை குறிப்பிட்டு தான் தற்போது அவரை ட்ரீட் போட்டுக் கொண்டுள்ளார்.