Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ஒமைக்ரானா…..? 7 பேரின் மாதிரிகள் ஆய்வு…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!

நைஜீரியாவில்  இருந்து வந்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஒமைக்ரான் தொற்றா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியாவில் தற்போது வரை 40-க்கும் மேற்பட்டோர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழக எல்லைகளில் தீவிர கட்டுபாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நைஜீரியாவில் வந்த நபர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதா என அறிய மரபணு பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் அவருடன் தொடர்புடைய ஆறு பேரின் மரபணுவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |