ஜெர்மனி நாட்டில் மின்சார வாகனங்கள் வாங்கும் நபர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத் தொகை அடுத்த வருடம் வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டில் மின்சாரம் மற்றும் Electric and Hybrid வகை வாகனங்கள் வாங்கும் நபர்களுக்கு முன்பிருந்த அரசின் திட்டப்படி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டமானது இந்த வருடம் முடிவடைகிறது. இந்நிலையில் அந்நாட்டின் புதிய நிர்வாகம் இத்திட்டத்தை அடுத்த வருடம் வரை நீட்டிப்பதாக தெரிவித்திருக்கிறது.
நாட்டில் கடந்த வாரத்தில் தான் புதிய அரசு அமைக்கப்பட்டது. அப்போது வரும் 2023 ஆம் வருடத்திலிருந்து, “சாதகமான காலநிலை-பாதுகாப்பு விளைவு உடைய மின்சார வாகனங்களுக்கு மட்டும் தான் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று பொருளாதாரம் மற்றும் காலநிலை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அதனை, நிறைவேற்றுவதற்காக மின்சாரத்தின் மூலமாக வாகனங்கள் பயணிக்கும் குறைந்தபட்ச தூரத்தை வைத்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மின்சார வாகனங்களை வாங்கும் நபர்களுக்கு 9,000 யூரோக்களும், plug-in hybrid வாகனங்களை வாங்கும் நபர்களுக்கு 6,750 யூரோக்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2030-ஆம் வருடத்திற்குள், குறைந்தது 15 மில்லியன் முழுமையான மின்சார வாகனங்களை சாலையில் பயன்பாட்டிற்கு கொண்டுவர புதிய நிர்வாகம் முயன்று வருகிறது.