புதுக்கோட்டையில் நடைபெறும் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தேர்வாகிய குரும்பூரை சேர்ந்த 11 பேருக்கு பயிற்சி அளித்த மாஸ்டர் ஸ்டீபனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
ஆண்டு தோறும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் மாவட்ட வாரியாக வீரர்களை தேர்வு செய்து , மாநில அளவிலான போட்டி நடத்தி வருகின்றது.அந்தவகையில் தற்போது 30_ஆம் ஆண்டு மாநில அளவிலான சிலம்பாட்டபோட்டி மாவட்ட வாரியாக நடைபெற்று வருகின்றது. தூத்துக்குடி மாவட்டம் அளவிலாக நடைபெற்ற போட்டி இம்மாவட்டத்தில் உள்ள தருவை மைதானத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டிகளில் குரும்பூர் தமிழர்கள் வீர விளையாட்டு கலைக்குழுவின் மாஸ்டர் ஸ்டீபன் அவர்களிடம் பயிற்சி பெற்ற 50 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 25 பேர் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். வெற்றி பெற்றதில் 6 ஆண்கள் , 5 பெண்கள் மாநில அளவிலான போட்டியில் விளையாடுகின்றனர்.
மாநில அளவில் தேர்வு :
இதில் , 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஆஷா , தர்ஷினி , வைஷினவி_யும்
19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சினேஹா , சிவ ஷண்முக பிரியா_வும் ,
14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஹார்ட்வின் , ஜஸ்ட்டின் , ஜபசன் ஜோஷ்வா ,
19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் செந்தாமரை கண்ணன் , மகாராஜன் , ஆல்வின் ராஜா ஆகியோர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
மாநில அளவிலான போட்டி :
இப்படி மாவட்டம் முழுவதும் வெற்றி பெற்று தேர்வாகிய சிலம்பாட்ட வீரர்கள் , வீராங்கனைகள் வருகின்ற 26,27,28 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர்.
மாஸ்டர் ஸ்டீபனுக்கு குவியும் பாராட்டுகள் :
மாநில அளவில் விளையாட தேர்வாகியுள்ள 11 வீரர்களில் சரிக்கு சமமாக பெண்களும் இடம்பெற்றுள்ளதால் இவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி கொடுத்த மாஸ்டர் ஸ்டீபன் அவர்களை அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் , முன்னாள் சிலம்ப ஆட்ட வீரர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஏற்கனவே இரண்டு வாரத்திற்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் இவரிடம் பயிற்சி பெற்ற நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி , பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி , அபர்ணா மேல்நிலைப்பள்ளி , ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளி , ஸ்டார் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என 25 பேர் பங்கேற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.