Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. ஓட்டுநர் செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லாரி ஓட்டுனருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டரை பகுதியில் லாரி ஓட்டுநரான தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு தேவராஜ் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேவராஜை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தேவராஜுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |