Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. கணவரின் கொடூர செயல்…. மதுரையில் பரபரப்பு…!!

மனைவியின் கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள கீரைத்துறை பகுதியில் ஆட்டோ டிரைவரான மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மூர்த்தி முனீஸ்வரியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனீஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |