விபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து வாகனத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியானது போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் 100ற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக கூடுதல் காவல்துறையினர் நியமனம் செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு நிபுணர்களிடம் தெரிவித்துள்ளார்.