ஸ்வீடன் கடற்கரையின் பால்டிக் கடலில் சரக்கு கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் மாயமான 2 நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் Ystad என்ற நகருக்கும் Bornholm என்ற டென்மார்க் தீவுக்கும் நடுவிலிருக்கும் பால்டிக் கடலில் நேற்று டென்மார்க் தீவின் Karin Hoej மற்றும் பிரிட்டன் நாட்டின் Scot Carrier ஆகிய 2 சரக்கு கப்பல்களும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், ஸ்வீடன் நாட்டின் Södertälje-நகரிலிருந்து, டென்மார்க் தீவில் உள்ள Nykøbing Falster-க்கு பயணித்த, டென்மார்க் தீவின் கப்பல், கடலுக்குள் கவிழ்ந்தது. அதிலிருந்த பணியாளர்கள் மாயமானதாகவும், அவர்களை கண்டுபிடிக்க தேடுதல் பணிகள் நடப்பதாகவும், ஸ்வீடன் ஸ்வீடிஷ் கடல்சார் நிர்வாகம் கூறியிருக்கிறது.
மேலும், இதற்காக 1 ஹெலிகாப்டர், சுவீடன் நாட்டின் 9 கப்பல்கள் மற்றும் 2 டேனிஷ் கப்பல்கள், தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளன. இது மட்டுமல்லாமல், ஸ்வீடிஷ் கடலோர காவல்படையிலிருந்து விமானமும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஸ்வீடன் கடல்சார் நிர்வாகம் விபத்து நேர என்ன காரணம்? என்பது தற்போது வரை தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.