Categories
மாநில செய்திகள்

BREAKING : 7,56,142 பேருக்கு கடனுதவி…. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி….!!!!

மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 7,56,142 பேருக்கு கடனுதவி வழங்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமை தாங்கினார். முன்னதாக மகளிர் சுய உதவிக்குழு கண்காட்சியை தற்போது அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் பேசி வருகிறார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது “தமிழகம் முழுவதும் 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பேருக்கு கடனுதவி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இது மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |