Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஒரே பிரீமியம் தான் வாழ்நாள் முழுவதும் பென்ஷன்…. சூப்பரான பாலிசி…. இதோ முழு விவரம்….!!!!

அனைவருக்கும் தங்களின் கடைசி காலத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற பயம் நிச்சயம் இருக்கும்.ஆனால் பென்ஷன் என்ற பெயரில் இறுதி காலத்தில் ஒரு நிலையான தொகை வந்து கொண்டிருந்தால் அந்த பயம் தேவையில்லை. அதற்காக சம்பாதிக்கும் காலத்திலேயே ஏதேனும் பென்சன் திட்டத்தில் சேர்ந்து பணத்தை போட்டு வைத்தால் உங்களுக்கு மிகவும் நல்லது. அவ்வாறு பென்ஷன் திட்டங்கள் நிறைய உள்ளது. ஒவ்வொரு மாதமும் பிரீமியம் செலுத்தி பென்ஷன் வாங்கும் திட்டமும் உள்ளது. ஒரே பிரீமியம் செலுத்தி பென்ஷன் வாங்கும் திட்டமும் நிறைய உள்ளது. அப்படிப்பட்ட ஒரு திட்டம் தான் எல்ஐசி சரல் பென்ஷன் திட்டம்.

இந்தத் திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் செயல்படுத்தி வருகின்றது. இந்தப் பாலிசியை வாங்கினால் ஒரே ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் மட்டும் போதும். வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பணம் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். இந்தத் திட்டத்தில் இரண்டு வசதிகள் உள்ளன. முதல் வசதியில் பாலிசிதாரர் உயிரோடு இருக்கும் வரையில் அவருக்கு பென்ஷன் கிடைக்கும். அவர் இறந்த பிறகு அவரது நாமினிக்கு அடிப்படை பிரீமியம் தொகை வழங்கப்படும். இரண்டாவது வசதியில் கணவன் மற்றும் மனைவி இருவரில் யார் கடைசி வரை உயிரோடு இருக்கிறார்களோ அவர்களுக்கு பென்ஷன் தொகை கிடைக்கும்.

பாலிசிதாரர் உயிரிழந்த பிறகும் அதே பென்சன் தொகை அவரது வாழ்க்கை துணையின் இறுதிக்காலம் வரை வந்து கொண்டே இருக்கும். இருவருமே இறந்த பிறகு நாமினிக்கு அடிப்படை பிரீமியம் தொகை வழங்கப்படும். இந்த பாலிசியை ஆன்லைன் மூலமாக நீங்கள் வாங்கலாம். 40 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியை வாங்க முடியும். ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு பென்ஷன் வர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஒரு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் என்ற அளவில் பிரீமியம் செலுத்தி இருக்க வேண்டும். காலாண்டு அடிப்படையில் பென்சன் வாங்க நினைத்தால் ஒரு மாதத்திற்கு 3000 ரூபாய் என்ற அளவில் பிரீமியம் செலுத்த வேண்டும். எனவே தாமதிக்காமல் இந்த பாலிசியில் சேர்ந்து பலனைப் பெறுங்கள்.

Categories

Tech |