Categories
தேசிய செய்திகள்

“அப்படிப்போடு”…. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இனி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

ரேஷன் கார்டு குறித்த அனைத்து வசதிகளையும், மாற்றங்களையும் செய்வதற்கு “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” என்ற திட்டத்தின்படி மேரா ரேஷன் என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகள் மக்களின் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இதிலுள்ள தகவல்கள் அனைத்தும் சரியாகவும், புதுப்பிப்பு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். அதனால் ரேஷன் அட்டைகளில் ஏதேனும் சில மாற்றங்களை செய்வதற்கு நீங்கள் அலுவலகம் சென்று அலையத் தேவை இல்லை. ஆகவே இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே இந்த சேவைகளை செய்வதற்கு மொபைல் செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின்படி மத்திய அரசு மேரா ரேஷன் என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலமாக ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும். மத்திய அரசின் இந்த மொபைல் ஆப் பயன்பாடானது 10 மொழிகளில் கிடைக்கிறது. இந்த ஆப் புதிய ரேஷன் கார்டுக்கு பதிவு செய்தல், ரேஷன் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்வது உள்ளிட்ட பல வசதிகளை வழங்குகிறது. அதேசமயம் வேலை அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் பிற மாநிலங்களுக்கு இடம் பெயரும் மக்களும் இந்த செயலியை பயன்படுத்தி சேவைகளை பெற்றுக்கொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்ளுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதை இந்த ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இந்த ஆப்பிள் இடம்பெயர்வு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக புலம்பெயர்ந்தோர் தங்கள் இடம்பெயர்வு விவரங்களை சரிபார்க்க முடிகிறது. மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் உணவு தானியங்களின் தகுதி, அருகில் இருக்கும் நியாய விலைக் கடைகளையும் கண்டறியலாம். தற்போது ரேஷன் கார்டு குறித்த அனைத்து சேவைகளும் நாட்டின் 3.7 லட்சத்திற்கும் அதிகமான பொது சேவை மையங்களில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி ஆண்ட்ராய்டு பயனர்கள் மேரா ரேஷன் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து ஆதார் அல்லது ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

Categories

Tech |