மீனாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களிடையே முன்னணி நட்சத்திரமாக கொண்டாடப்பட்டார். சமீபத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ”அண்ணாத்த” திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக, திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் முழு சொத்து மதிப்பு 80 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.