ஜப்பானில் கரப்பான் பூச்சியிலிருந்து பீர் தயாரிப்பது அருவருப்பை ஏற்படுத்துகிறது.
பானங்கள் உடலுக்கு நல்லது என நினைத்தாலும் சில பானங்களின் மூலப்பொருள் எது என்று நமக்கு வெளியில் தெரிவதில்லை. இந்த உலகத்தில் சாப்பிடுவதற்கு பழங்கள், காய்கறிகள் அல்லது இறைச்சி என பல்வேறு உணவுப் பொருட்கள் இருக்கிறது. எனினும் சீனா போன்ற நாடுகளில் பூச்சிகள், ஈக்கள் போன்றவற்றை உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்கின்றனர். அவர்களின் உணவு முறைகள் நமக்கு வித்தியாசமானதாக தோன்றும். ஆனால் அது அவர்களின் உணவு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
இதனை அருவருப்பாக நினைக்கும் நீங்கள் ஜப்பானில் கரப்பான் பூச்சியிலிருந்து பீர் தயாரிக்கப்படுகிறது என்பதை அறிந்தால் என்ன செய்வீர்கள். அதாவது “ஜப்பானில் கபுடோகாமா எனப்படும் பாரம்பரிய முறையில் வடிகட்டப்படும் இந்த பீர் தனிச்சிறப்பு பீர் என்று கூறப்படுகிறது. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இந்த பிரத்யேக பீரை ஜப்பானியர்கள் அருந்தி வருகின்றனர்.
கரப்பான் பூச்சி என்றாலே அருவருப்பாக இருக்கும் நிலையில் ஜப்பானில் இருப்பவர்கள் அதில் இருந்து தயாரிக்கும் பீரை மிகுந்த ஆர்வத்துடன் குடிக்கிறார்கள். இவ்வாறு ஜப்பானின் இந்த சிறப்பு கரப்பான் பீர் Insect Sour அல்லது Konchu Sour என்று அழைக்கப்படுகிறது. நன்நீரில் இருக்கும் கரப்பான் பூச்சிகளால் இந்த பானம் தயாரிக்கப்படுகிறது. . இந்த கரப்பான் பூச்சிகளை பிடித்து அதை வெந்நீரில் வேகவைத்து 3 முதல் 4 தினங்கள் வரை வைத்த பிறகு, அதில் இருந்து எடுக்கக்கூடிய சாறு பீராக மாற்றப்படுகிறது.