ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்தியா ஆசிய கண்டத்திலேயே 4-ஆவது சக்திவாய்ந்த நாடாக விளங்குவது தெரியவந்துள்ளது.
இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா பாதிப்பிற்கு பின் ஏற்பட்ட பாதிப்புகள் சீனா மற்றும் இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது ஆஸ்திரேலியாவின் பிரபல நிறுவனமான “லோவி” நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும் நிதி அமைப்பு மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது சீனா வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஆனால் இந்தியாவோ ராணுவம், பொருளாதாரம், கலாச்சாரம் உள்ளிட்ட செல்வாக்கினால் 4-ஆவது இடத்தை பிடித்து “பவர் ஃபுல்” நாடாக விளங்குவதாக லோவி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.