இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொண்டமாநத்தம் பகுதியில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போது மேல்வேலம் புதிய காலனி அருகில் சென்ற நிலையில் ஓடும் இருசக்கர வாகனத்திலிருந்து சேட்டு திடீரென கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.