Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விபத்தில் பலியான மகன்…. துக்கத்தில் இறந்த தாய்…. சோகத்தில் உறவினர்கள்….!!

மகன் இறந்த துக்கத்தில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் ஞானம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அருள் என்ற மகனும், புனிதா என்ற மகளும் உள்ளனர். அதன்பின் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வரும் இவரின் மகன் அருள் மேகனா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஜிந்தியா என்ற மகளும் மற்றும் மனோரஞ்சன் என்ற மகனும் இருக்கின்றனர்.

இதனை அடுத்து அருள் 7-ஆம் தேதி ஆற்காடு அருகே நடந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் பிரேத பரிசோதனை செய்து அவரின் உடல் வாணியம்பாடியில் இருக்கின்ற அவரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் முன்னிலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விபத்தில் பலியான மகனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத ஞானம்மாள் திடீரென அதிர்ச்சியில் மூச்சு விட கஷ்டமான நிலையில் கீழே விழுந்தால் அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஞானம்மாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |