சிறையில் அடைக்கப்பட்ட கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் முத்துசாமியை செங்குன்றம் காவல்துறையினர் கஞ்சா வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் சிறைக்குள் இருந்த முத்துசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனால் புழல் சிறை மருத்துவமனையில் முத்துசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.