Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுமியை காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 வயது சிறுமி அங்கும் இங்கும் சுற்றித் திரிந்துள்ளார். அவரது கையில் துணிப்பை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் கோயம்பேடு காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிறுமி கும்பகோணத்தில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தாயார் திட்டியதால் சிறுமி கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி பேருந்தில் கோயம்பேடு வந்துள்ளார். அதன்பிறகு எங்கு எங்கு செல்வது என தெரியாமல் பேருந்து நிலையத்திலேயே சிறுமி சுற்றி திரிந்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோரை வரவழைத்து காவல்துறையினர் அறிவுரை கூறி சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |