புதிதாக குடி போன வீட்டில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் நாகரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் வேலை தேடி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அரக்கோணத்தை அடுத்த இருக்கும் அருந்ததிபாளையத்தில் உள்ள சரண்யாவின் தாய் வீட்டில் தங்கி வேலை தேடி வந்துள்ளனர்.
அதன்பின் ஆசிரியர் பயிற்சி முடித்திருந்த சரண்யாவிற்கு இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வேலை கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆதலால் தாய் வீட்டின் அருகில் புதிதாக சிமெண்ட் ஷீட் அமைத்து வீடு கட்டி குடி புகுந்து ஊரில் இருக்கும் பொருட்களை எடுத்து வரும் படி சரண்யா கணவரிடம் கடந்த சில நாட்களாக கூறியுள்ளார். இதனை அடுத்து புதிய வீட்டில் நாகரத்தினம் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரண்யா கூச்சலிட்டதால் இவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நாகரத்தினத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் நாகரத்தினம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.