2-ஆம் நிலை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனையின் முடிவு வெளியானதும் தகுதி உடையவர்களுக்கு பயிற்சி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நபர்களுக்கு வருகின்ற பிப்ரவரி மாதம் பயிற்சி தொடங்க இருக்கிறது. இதில் வேலூர் மாவட்டத்தில் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இரண்டாம் நிலை காவலர்களின் கைரேகைகளை சேகரிக்கும் பணி கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று இருக்கிறது. இவற்றில் காது, கண் பிரிவு உள்ளிட்ட 5 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 186 நபர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த பரிசோதனை முடிவு வெளியானதும் தகுதி உடையவர்களுக்கு பயிற்சி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.