Categories
மாநில செய்திகள்

வெங்காயம் இறக்குமதி…. ”ரூ 8,00,000 மோசடி”….. பிரபல ஜவுளி கடை உரிமையாளர் மகன் அதிர்ச்சி …!!

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளரின் மகன் சுந்தரலிங்கத்திடம் வங்கி கணக்கு எண்ணை மாற்றி ரூ. 8 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

நாசிக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் ரூபாய் 8 லட்சத்திற்கு ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளரின் மகன் சுந்தரலிங்கம் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளார்.

அப்போது, வெங்காயம் அனுப்பியவரின் வங்கிக் கணக்கு எண்ணை மறைத்த லாரி ஓட்டுநர் பிரகாஷ், தன்னுடைய வங்கி எண்ணை சுந்தரலிங்கத்திடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, நாசிக் வெங்காய வியாபாரியுடைய வங்கிக் கணக்கு எண் என நினைத்து, ரூ.8 லட்சத்தை ஓட்டுநர் பிரகாஷின் கணக்கில் சுந்தரலிங்கம் செலுத்தியுள்ளார்.

இதனிடையே தற்போது தான் மோசடி செய்யப்பட்டது குறித்து சுந்தரலிங்கத்திற்கு தெரியவரவே, இதுதொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன் பேரில், லாரி ஓட்டுநர் பிரகாஷை காவல துறையினர் தேடிவருகின்றனர்.

Categories

Tech |